TNPSC Thervupettagam

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் விலை குறைப்பு

November 27 , 2017 2583 days 817 0
  • புற்றுநோய், தோல் பிரச்சனைகள் மற்றும் இருதய நோய்கள் போன்ற பல்வேறு நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படும் 51 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின்  அதிகபட்ச விலை வரம்பை தேசிய மருந்துப் பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் (NPPA – National Pharmacentical Authority) நிர்ணயித்துள்ளது.
  • 6 முதல் 53 சதவீதம் வரை இம்மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
  • விலை வரம்பு கட்டுப்பாட்டின் கீழ் சேர்க்கப்படாத மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை வருடத்திற்கு 10 % அதிகரிக்க மருந்துப் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையம்-NPPA
  • தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையமானது மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறையின் கீழ் செயல்படும் சுதந்திரமான அமைப்பாகும்.
  • இது 1997ல் அமைக்கப்பட்டது.
  • மருத்துவப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யவும், அவற்றின் விலையை மறுஆய்வு செய்யவும், மத்திய மருத்துவப் பொருட்கள் துறையின் நெறிமுறைகளை செயல்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படாத மருந்துகளின் விலை நிலவரங்களை கண்காணித்திடவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்