புற்றுநோய், தோல் பிரச்சனைகள் மற்றும் இருதய நோய்கள் போன்ற பல்வேறு நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படும் 51 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் அதிகபட்ச விலை வரம்பை தேசிய மருந்துப் பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் (NPPA – National Pharmacentical Authority) நிர்ணயித்துள்ளது.
6 முதல் 53 சதவீதம் வரை இம்மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
விலை வரம்பு கட்டுப்பாட்டின் கீழ் சேர்க்கப்படாத மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை வருடத்திற்கு 10 % அதிகரிக்க மருந்துப் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையம்-NPPA
தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையமானது மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறையின் கீழ் செயல்படும் சுதந்திரமான அமைப்பாகும்.
இது 1997ல் அமைக்கப்பட்டது.
மருத்துவப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யவும், அவற்றின் விலையை மறுஆய்வு செய்யவும், மத்திய மருத்துவப் பொருட்கள் துறையின் நெறிமுறைகளை செயல்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படாத மருந்துகளின் விலை நிலவரங்களை கண்காணித்திடவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.