TNPSC Thervupettagam

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955

June 5 , 2020 1508 days 693 0
  • மத்திய அமைச்சரவையானது 1955 ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைச் செய்துள்ளது.
  • 1955 ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் கீழ், பருப்பு வகைகள், தானியங்கள், வெங்காயம், எண்ணெய் வித்துக்கள், உருளைக்கிழங்கு போன்ற வேளாண் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் முறையிலிருந்து விலக்கப் பட்டுள்ளன.
  • இது தனியார் முதலீட்டாளர்களை அதிகப்படியான ஒழுங்குமுறைத் தலையீடு குறித்த பயத்திலிருந்து மீட்டெடுத்து உதவ இருக்கின்றது.
  • மேலும், இந்த திருத்தமானது மிகவும் நெருக்கடியான காலக்கட்டங்களில் மட்டுமே கையிருப்பு வரம்பைக் கட்டாயப்படுத்தி அமல்படுத்த அனுமதியளிக்க இருக்கின்றது.
  • வறட்சி மற்றும் இயற்கைப் பேரிடர் போன்றவை இதில் அடங்கும்.
  • இந்தக் கையிருப்பு வரம்பானது செயல்பாட்டாளர்கள் மற்றும் மதிப்புக் கூட்டினை அதிகப்படுத்துவதற்காக செயல்படும் பங்கேற்பாளர்களுக்குப் பொருந்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்