TNPSC Thervupettagam

அத்தியாவசியமல்லாத 19 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு

September 28 , 2018 2122 days 628 0
  • மத்திய நிதி அமைச்சகமானது உயர்மட்ட நுகர்வோர் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்த “19 அத்தியாவசியமல்லாத பொருள்கள்” மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது.
  • இந்த 19 அத்தியாவசியமல்லாத பொருட்களில் காற்று குளிர்விப்பான்கள், குளிர்பதன பெட்டிகள், சலவை இயந்திரம் மற்றும் விமான விசையாழி எரிபொருள் ஆகியவை உள்ளடங்கும்.
  • நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (CAD – Current Account Deficit) சுருக்குவதன் மூலம் ரூபாய் மதிப்பின் சரிவை நிலைப்படுத்தவும், வெளிநாட்டுக்கு வெளியேறும் நிதிகளை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வரவும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
  • கையிருப்பு மற்றும் வெளியேறும் அந்நிய செலவாணி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு CAD ஆகும். இது ஏப்ரல்-ஜுன் காலண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4% ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்