TNPSC Thervupettagam

அந்தமானில் இரத்தம் உறிஞ்சும் ஈக்கள்

January 25 , 2025 3 days 48 0
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 23 வகையான இரத்தம் உறிஞ்சும் ஈக்கள் இருப்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ள நிலையில் இதில் இந்தியாவில் முன்னர் பதிவு செய்யப்படாத 13 இனங்கள் அடங்கும்.
  • உள்ளூரில் 'பூசி ஈக்கள்' என்று அழைக்கப்படும் இந்தப் பூச்சிகள் குலிகாய்ட்ஸ் என்ற பேரினத்தைச் சேர்ந்தவை என்பதோடு, அவற்றின் உணவு உட்கொள்ளும் பழக்கத்தில் கொசுக்களைப் போலவே அவை உள்ளன.
  • அவை முதன்மையாக செம்மறி ஆடுகள், ஆடுகள் மற்றும் மாடுகள் போன்ற கால் நடைகளின் ரத்தத்தையும், மான்கள் போன்ற காட்டு விலங்குகளின் ரத்தத்தினையும் உறிஞ்சுகின்றன.
  • அவற்றில் ஐந்து இனங்கள் கால்நடைகளுக்கு ஆபத்தான நீல நாக்கு நோய் வைரஸைப் பரப்பக் கூடியவை.
  • இதில் அடையாளம் காணப்பட்ட 23 இனங்களில் சுமார் 17 இனங்கள் மனிதர்களையும் கடிக்கின்றன, இருப்பினும் இது வரை மனித நோய்ப் பரவல் எதுவும் பதிவாகவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்