அந்தமான் & நிக்கோபர் தீவுகளுக்கான இராணுவப் பயிற்சி
November 25 , 2017 2584 days 858 0
அந்தமான் நிக்கோபாரின் இராணுவப் பிரிவின் கீழ் அந்தமான நிக்கோபார் தீவுகளுக்கான இராணுவப் பயிற்சி (DANX) நடத்தப்பட்டது.
இதன் முக்கிய நோக்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை தற்காக்கும் வகையில் அனைத்து படைப்பிரிவின் நடைமுறைகளையும், பயிற்சிகளையும் நடைமுறைப்படுத்தி பரிசோதிப்பதாகும்.
இந்தப் பயிற்சியில் பிரதான நிலப் பகுதிகளிலிருந்து படைவீரர்கள், சிறப்புப் படைகள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் கனரக விமானங்கள் அடங்கிய சிறப்புப் படைகளும் கலந்து கொண்டன.
இந்தப் பயிற்சியின் நோக்கம், இராணுவப் படைகளின் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைந்த வகையில் திட்டமிட்டு துல்லியமாக நிறைவேற்றிட திட்டங்கள் வகுப்பது ஆகும்.