அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் தயாரிப்புகளுக்குப் புதிய புவிசார் குறியீடுகள்
January 25 , 2025 3 days 69 0
முதல் முறையாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஏழு தயாரிப்புகள் ஆனது ஒரே நேரத்தில் புவி சார் (GI) குறியீடுகளைப் பெற்றுள்ளன.
அந்தத் தயாரிப்புகள் ஆனது நிக்கோபர் தேங்காய், நிக்கோபரி தவி-இ-நைச் (சுத்தமான தேங்காய் எண்ணெய்), அந்தமான் கரேன் மஸ்லி அரிசி, ஹோடி (ஒரு புறங்களில் நீண்ட சிறுபடகு), நிக்கோபரி பாய் (சத்ராய்-ஹிலுவோய்), நிக்கோபாரி ஹட் (சான்வி பட்டி - நிய் ஹுபுல்), படௌக் மரக் கைவினைப்பொருள் ஆகியனவாகும்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது (NABARD), இதற்கான ஒரு விண்ணப்பச் செயல்முறையை மேற்கொண்டது.