TNPSC Thervupettagam

அந்துப் பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கை பற்றிய சமீபத்திய ஆய்வு

February 23 , 2022 915 days 759 0
  • வடகிழக்கு இந்தியாவின் இமாலயச் சூழலமைப்பில் திகழும் மகரந்தச் சேர்க்கைக்கு அந்துப்பூச்சிகள் மிக அவசியம் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • வடகிழக்கு இமாலயத்திலுள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலுள்ள 21 வெவ்வேறு வகையான தாவர இனங்களில் 91 அந்துப்பூச்சி இனங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • எரேபிடே (டைகர் அந்துப் பூச்சிகள், எரேபிடே அந்துப்பூச்சிகள், லைச்சன் அந்துப் பூச்சிகள்) ஆகியவை இமாலயப் பகுதிகளில் நடைபெறும் மகரந்தப் பரிமாற்றத்திற்கான மிக முக்கியக் குடும்பங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
  • பகல் நேரங்களில் மகரந்த தேனிக்கள் செய்யும் வண்ணத்துப்பூச்சி மற்றும் தேனிக்கள் போன்றவை மீதே பெரும்பாலான மகரந்தச் சேர்க்கை ஆராய்ச்சியானது மேற்கொள்ளப் படுகின்றன என்பதால் இந்த ஆய்வு முடிவுகள் ஒரு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
  • அதே சமயம் இரவு நேர மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் பங்கு குறைந்த அளவு அறிவியல் ஈர்ப்பினையேப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்