TNPSC Thervupettagam

அந்நிய நேரடி முதலீடு 2022-23

August 5 , 2023 479 days 285 0
  • 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் அந்நிய நேரடி முதலீடு (FDI) வரத்து ஆனது 27.7% குறைந்து சுமார் 2.17 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • 2021-22 ஆம் ஆண்டில் 84.84 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 16.34% ஆக குறைந்து 70.97 பில்லியன் டாலராக இருந்தது.
  • மகாராஷ்டிராவின் அந்நிய நேரடி முதலீட்டு வரவில் 4.08% குறைந்தும், கர்நாடகாவின் அந்நிய நேரடி முதலீட்டு வரவில் 52.74% குறைந்து 10.43 பில்லியன் டாலராகவும் உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் 2.70 பில்லியன் டாலராக இருந்த 2022-23 ஆம் ஆண்டில் குஜராத்தின் அந்நிய நேரடி முதலீட்டு வரவு 74.4% உயர்ந்து 4.71 பில்லியன் டாலராக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் நிதியாண்டில் 1,72,974.93 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டில் மேற் கொள்ளப் பட்ட புதிய முதலீடுகள் ஆனது 2023 ஆம் நிதியாண்டில் 1,73,494.34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில் இதில் தனியார் முதலீட்டின் பங்கு 75.20% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்