TNPSC Thervupettagam

அந்நிய நேரடி முதலீடு - தமிழ்நாடு

March 30 , 2022 975 days 594 0
  • தமிழகத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் சுமார் 41.5% உயர்ந்து 17,696 கோடியாக (சுமார் 2.4 பில்லியன் டாலர்) உள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டின் அதே கால கட்டத்தில் (கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய போது) இருந்த 12,504 கோடி (சுமார் 1.7 பில்லியன் டாலர்) என்ற அளவிலிருந்து உயர்ந்து உள்ளது.
  • இவற்றுள், 2021-22 ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டான அக்டோபர் – டிசம்பர் (2021) கால கட்டத்தில் 53% அல்லது 9,332 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  
  • நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகத்தினுடையப் பங்கு 4 சதவீதம் என்ற அளவிலிருந்து 5% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் தரவுகள் கூறுகின்றன.
  • மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி ஆகியவற்றையடுத்து தமிழகம் இதில் 5வது இடத்தில் உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் – செப்டம்பர் கால கட்டத்தில் தமிழகத்தில் 8,364 கோடி அந்நிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்