அந்நிய நேரடி முதலீட்டின் மூலங்கள்
December 3 , 2020
1455 days
655
- இந்தத் தரவு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னேற்றத் துறையால் அளிக்கப் பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் சிங்கப்பூர் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
- 2020-2021 ஆம் ஆண்டின் முதல் பாதி காலத்தில் இந்தியாவிற்கான இரண்டாவது மிகப் பெரிய அன்னிய நேரடி முதலீடானது அமெரிக்காவின் முதலீடாகும்.
- அமெரிக்காவானது மொரீஷியஸை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது.
- 2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சிறந்த வர்த்தகப் பங்காளராகவும் அமெரிக்காவே இருந்தது.
Post Views:
655