TNPSC Thervupettagam

அந்நிய நேரடி முதலீட்டிற்கான நம்பிக்கைக் குறியீடு - 2018

May 11 , 2018 2264 days 645 0
  • உலகளாவிய ஆலோசனை நிறுவனமானT. கியர்னியால் வெளியிடப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டிற்கான நம்பிக்கைக் குறியீட்டில் இந்தியா 11-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டில் இந்தியா மூன்று இடங்களை தரவரிசையில் தவறவிட்டுள்ளது. இந்தியா 2017-ஆம் ஆண்டில் 8-வது இடத்தையும், 2016-ஆம் ஆண்டில் 9-வது இடத்தையும் பிடித்தது.

  • 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
  • 2018-ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகள் அமெரிக்கா (முதலிடம்), கனடா (இரண்டாம் இடம்), ஜெர்மனி (மூன்றாம் இடம்), ஐக்கியப் பேரரசு (நான்காம் இடம்), சீனா (ஐந்தாம் இடம்) ஆகியனவாகும்.
  • சமீபத்திய பெருநிறுவன வரிவிகிதக் குறைப்புகள், நிலையான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான வலுவான மிகப் பெரிய சந்தையை கொண்டிருக்கும் காரணங்களினால் அமெரிக்கா தொடர்ச்சியாக ஆறாவது முறையாக முதலிடத்தை பிடித்திருக்கின்றது.
  • பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சுவிட்சர்லாந்தும், இத்தாலியும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளன.
  • இந்தக் குறியீடானது அரசியல், பொருளாதார மற்றும் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளில் செய்யப்படும் மாற்றங்களானது வரும் ஆண்டுகளில் எவ்வாறு அந்நிய நேரடி முதலீட்டின் வரவை பாதிக்கும் என்பதற்கான வருடாந்திர ஆய்வு அறிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்