இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு பிரதமர் தலைமையிலான கேபினெட் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாட்டில் எளிதாக தொழில் புரிவதற்கான சூழலை உருவாக்குவதற்கு அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை எளிமைப்படுத்துவதற்காகவும் , தாராளமயப் படுத்துவதற்காகவும் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு பெருகுவதோடு, அதன் விளைவாக முதலீடு, வருமானம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் வளர்ச்சியும் உண்டாகும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளராக விளங்கும் அந்நிய நேரடி முதலீடானது ஓர் கடன் சாரா நிதியியல் மூலமாகும் (source of non-debt finance).