TNPSC Thervupettagam

அந்நியச் செலாவணி கையிருப்பு

January 13 , 2023 553 days 302 0
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 2022 ஆம் ஆண்டில் 70.1 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.
  • டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 562.9 பில்லியன் டாலராக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 10.2% வரை சரிந்தது.
  • 2022-ஆம் ஆண்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டு பங்குச் சந்தையில் இருந்து ரூ.1.2 லட்சம் கோடியைத் திரும்பப் பெற்றனர்.
  • வெளிநாட்டு நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள், தங்கள் பங்கு சார்ந்த முதலீட்டை ரூபாய் மதிப்பில் விற்பனை செய்து, அதை டாலராக மாற்றிப் பணத்தைத் திரும்பப் பெறுகிறார்கள்.
  • அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது வரை இல்லாத அளவுக்கு 642.5 பில்லியனை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்