TNPSC Thervupettagam

அனல் மின் நிலையங்களுக்கான விதிமுறைகள்

April 24 , 2021 1185 days 618 0
  • இந்த விதிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது இப்போது திருத்தி உள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டில் துகள்மப் பொருட்கள், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளுக்கான உமிழ்வு அளவுகளை அறிவித்து இருந்தது.
  • இவற்றை 2017 ஆம் ஆண்டில் மின் நிலையங்கள் பின்பற்ற வேண்டுமென அது விதித்து இருந்தது.
  • இது இப்போது தேசிய தலைநகரப்  பிராந்தியத்தின் 10 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதிகளில் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க வெப்ப மின் நிலையங்களை அனுமதிக்கிறது.
  • நைட்ரஜன் (NOx), சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் துகள்மப் பொருட்கள் (PM) ஆகியவற்றின் ஆக்சைடுகள், நிலக்கரியை எரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வரும் முதன்மை மாசுபடுத்திகளாகும்.
  • நாட்டில் மொத்த தொழில்துறை உமிழ்வுகளில் துகள்மப் பொருட்களின் 60 சதவீதம்; SO2 உமிழ்வின் 45 சதவீதம் ; NOx உமிழ்வின் 30 சதவீதம்; மற்றும் பாதரச உமிழ்வின் 80 சதவீதம் போன்ற அதிகமான உமிழ்வுகளுக்கு அனல் மின் நிலையங்கள் காரணம் ஆகின்றன.
  • மேலும் அனைத்துத் தொழில்துறை நிறுவனங்களாலும் எடுக்கப்படும் மொத்த நன்னீரில் 70 சதவீதத்திற்கு மேற்கூறிய அனல் மின் நிலையங்கள் பொறுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்