ஹைதராபாத்தைச் சேர்ந்த அனின்தித் ரெட்டிக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பின் (Federation of Motor Sports Clubs of India-FMSCI) 2018-ஆம் ஆண்டிற்கான தேசிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நபர் விருது (National Motor Sports Person of the Year') வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரு பிரீமியர் ஒற்றை இருக்கை மோட்டார் சாம்பியன்ஷிப் தொடர்களான MRF F1600 மற்றும் JK டயர்களின் யூரோ JK சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றமைக்காக இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பான FMSCI-ஆல் அனின்தித் ரெட்டி இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸிற்கு மிகப்பெரியப் பங்களிப்பை வழங்கியமைக்காக FMSCI-ன் முன்னாள் தலைவர் மற்றும் K1000 சாம்பியனுமான KD மதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.