ஓய்வூதிய துறை மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை ஆகியவை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘அனுபவ் இணைய தளம்’ என்ற இணைய தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
அரசுப் பணியில் பணியாற்றும் போது, ஓய்வு பெறும்/ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இது பயன்படுகிறது.
ஓய்வு பெற்றவர்கள் தங்களது குறிப்புகளை விட்டுச் செல்லும் இந்தக் கலாச்சாரம் ஆனது, எதிர்காலத்தில் நல்லாட்சி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அடித்தளமாக மாறும் என்று கருதப்படுகிறது.
அரசானது சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு அனுபவ் விருதுகள் திட்டத்தினை அறிவித்து உள்ளது.
இத்திட்டத்தில் பங்கேற்க, ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன்பும், ஓய்வு பெற்ற ஓராண்டு வரையிலும் தங்களின் அனுபவக் குறிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.