TNPSC Thervupettagam

அனுமதியளிப்பு அட்டைகள்

May 22 , 2019 1920 days 591 0
  • ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கமானது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு (EEA - European Economic Area) வெளியே உள்ள நாடுகளிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு வரும் சர்வதேசப் பயணிகளால் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட அனுமதி அட்டைகளை வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை நீக்கியுள்ளது.
  • இது பிரிட்டனிற்குள் எளிமையான முறையில் நுழைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
  • நுழைவின் போது நிரப்பப்பட்ட அனுமதி அட்டைகளை வைத்திருப்பதற்கு இந்தியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
EEA
  • ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி மீதான ஒப்பந்தமானது 1994 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • EEA மீதான ஒப்பந்தமானது பின்வருவனவற்றை ஒன்றிணைக்கின்றது.
  • ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்
  • 3 EEA நாடுகள் : ஐஸ்லாந்து, லிச்செடென்ஸ்டைன், நார்வே
  • இந்த நாடுகள் “உள்நாட்டுச் சந்தை” என்றறியப்படும் ஒரு பொதுச் சந்தையை உருவாக்குகின்றன.
  • சுவிட்சர்லாந்து EEA ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்