TNPSC Thervupettagam

அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வு

January 7 , 2018 2516 days 825 0
  • 2016-17-ஆம் ஆண்டிற்கான, நாட்டின் உயர்கல்வி மீதான அனைத்திந்திய ஆய்வை (All India Survey on Higher Education) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • 2016-17-ஆம் ஆண்டில், நாட்டில் உயர்கல்வியில் (அதாவது இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலை) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை (Student’s Enrolment) 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்த ஆய்வின் படி இந்தியாவில், 2015-16-ல்5 சதவீதம் என்ற அளவிலிருந்த உயர்கல்வி மீதான மொத்தப் பதிவு விகிதம் (Gross enrolment ratio-GER) தற்போது 2016-17-ல் 25.2% என்ற அளவை அடைந்துள்ளது.
  • இந்தியாவில் 2020-ல் உயர்கல்வியில் 30 சதவீத மொத்தப் பதிவு விகிதத்தை (GER) அடைவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கணக்கெடுப்பு ஆய்வின் படி, நாட்டில் 2015-2016-ல் 799 என்ற எண்ணிக்கையில் இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 2016-17-ல் 864 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
  • 18 முதல் 23-க்குட்பட்ட வயதுப் பிரிவினரில் உயர்கல்வி பயில்வதற்காக சேரும் மொத்த நபர்களின் பதிவு எண்ணிக்கையே மொத்தப் பதிவு விகிதம் (GER) எனப்படும்.
  • அதிக GER உடைய மாநிலங்களின் பட்டியலில் இந்திய மாநிலங்களுள், 9 சதவீதம் மொத்த பதிவு விகிதத்தைக் (GER) கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • 4 GER சதவிகிதத்தைக் கொண்டு பீகார் கடைசி இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்