TNPSC Thervupettagam

அனைத்து அரசுப்பணிகளுக்குமான ஒருங்கிணைக்கப்பட்ட செயலி

March 3 , 2018 2330 days 820 0
  • தெலுங்கானா அரசு “T APP Folio” என்ற m-Governance கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மாநிலத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் செயலியாகும் (Digital Application).
  • மீ சேவா சேவைகள், RTA சேவைகள், கட்டணம் செலுத்தல் மற்றும் செலுத்துதல் சேவைகள் (Payment Services) ஆகியனவற்றை ஒரு முனையில் மக்கள் பெறுவதற்கான (One point access) வசதி இந்த செயலியில் உள்ளது.
  • கர்நாடகாவுக்குப் பிறகு, இந்த டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக தெலுங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா, “அரசு முதல் மக்கள் வரை”(Government to Citizen) என்ற சேவையை வழங்கி வருகிறது.
  • “T APP Folio” ஆனது T wallet, my GHMC, RTA மற்றும் Hawk Eye ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • “T APP Folio”வில் உள்நுழைவதன் (Sign in) மூலம் அனைத்து விதமான சேவைகளுக்கான செயலிகளின் செயல்பாட்டை/சேவைகளை அறிய/பெற முடியும்.
  • இந்த செயலி மக்களின் வசதிக்காக தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்படுகிறது.
  • இந்திய அரசின் “e-TaaL” வலைத்தளத்தில் ஜூன் 2, 2014 முதல் டிசம்பர் 31, 2017 வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையில், 1000 மக்கள் தொகையில் எவ்வளவு மின்னணு பரிவர்த்தனை நடந்துள்ளது என்பதனடிப்படையில் தெலுங்கானா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்