TNPSC Thervupettagam

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம்

August 17 , 2021 1256 days 736 0
  • தி.மு.க அரசானது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 24 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களைபல்வேறு கோவில்களில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளது.
  • இந்து சமய அறநிலையத் துறையால் நடத்தப்படும் தமிழகத்திலுள்ள கோயில்களில் ஏற்கனவே இரண்டு பிராமணரல்லாத அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.
  • முதலாவது அர்ச்சகராக மாரிசாமி என்பவர் மதுரையிலுள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
  • இரண்டாவதாக தியாகராஜன் என்பவர் மதுரையிலுள்ள கணேசன் ஆலயம் ஒன்றில் 2020 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
  • தற்போது, சுகாஞ்சனா கோபிநாத் என்பவர் சென்னையிலுள்ள தேனுபுரிஸ்வரர் கோயிலில் ஒரு ஓதுவாராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார் எனும் பெருமையை இவர் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்