அனைத்து வகைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை
August 10 , 2024
105 days
168
- ஹரியானா மாநிலத்தில் 24 பயிர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை வரம்பின் (MSP) கீழ் கொள்முதல் செய்யப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
- 24 பயிர் வகைகளில், சுமார் 10 பயிர்கள் இந்த மாநிலத்தில் அதிகம் பயிரிடப்படாதவை ஆகும்.
- இந்தியாவிலேயே இவ்வளவு பரந்த அளவில் இத்தகைய நடவடிக்கையினை மேற் கொண்ட முதல் மாநிலமாக ஹரியானா திகழ்கிறது.
- இவற்றின் கொள்முதலுக்கு சுமார் 123.65 கோடி ரூபாய் அரசிற்குச் செலவாகும்.
- கோதுமை, நெல் மற்றும் மக்காச்சோளம் ஆகியவை அரசாங்கத்தினால் MSP வரம்பின் கீழ் பெருமளவில் கொள்முதல் செய்யப்படும் முக்கியப் பயிர்களாகும்.
Post Views:
168