அனைத்து வடிவங்களிலும் இருதரப்புப் போட்டிகளை வென்ற முதல் வெளிநாட்டு அணி - இந்தியா
January 18 , 2019 2141 days 614 0
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 விதமான போட்டிகளிலும் அனைத்து இருதரப்புப் போட்டிகளையும் வெற்றி கண்ட முதல் வெளிநாட்டு அணியாக இந்தியா உருவெடுத்திருக்கின்றது.
விராட் கோலியால் தலைமை தாங்கப்பட்ட இந்திய அணியே ஆஸ்திரேலியாவில் சர்வதேச இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை வெற்றி கண்ட முதலாவது இந்திய அணியாகவும் உருவெடுத்திருக்கின்றது.
யுவேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருதும் புகழ்பெற்ற வீரர் M.S. தோனி தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.