பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட்டைப் பயன்படுத்தி இஸ்ரோவானது அனைத்து வானிலை புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளான ஈஓஎஸ்-01 என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி உள்ளது.
ஏவப்பட்ட இந்த புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளானது ராடார் மூலம் புகைப் படமெடுக்கும் ஒரு செயற்கைக் கோளாகும்.
மூன்று விண்கலத் தொகுப்பில் இது மூன்றாவது ஆகும்.
ரைசாட் -2 பி மற்றும் ரைசாட் -2 பிஆர் 1 ஆகியவை மற்ற இரண்டு ஆகும்.
இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் 2019 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டன.
விண்மீன் தொகுப்பில் உள்ள இந்த மூன்று செயற்கைக் கோள்களும் அனைத்து வானிலைகளையும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களுடன் 24 மணி நேரச் சேவையை வழங்கும்.
இந்த செயற்கைக் கோள் ரேடார் மூலமான படமாக்கத்தைப் பயன்படுத்துவதால், மேகங்கள், மூடுபனி அல்லது சூரிய ஒளி இல்லாததால் இது பாதிக்கப்படாது.
மூன்று செயற்கைக் கோள்களும் நகர்ப்புற நிலப்பரப்பு, வன நிலம் மற்றும் விவசாய நிலங்களைப் படமாக்கம் செய்ய எக்ஸ்-பேண்ட் (X-band) வகை ரேடார்களைப் பயன்படுத்துகின்றன.