MapMyIndia நிறுவனம் உருவாக்கிய வழிக்காட்டுதல் அமைப்பான Mappls செயலியில் விபத்துகள் அதிகம் நிகழும் 784 இடங்களையும் வரைபடமாக்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது.
விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகள் மற்றும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சரியாக தென்படாத பகுதிகள் பற்றிய நிகழ்நேர போக்குவரத்து அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை Mappls செயலியில் இருந்து பெறுவதற்காக MapmyIndia என்ற நிறுவனத்துடன் பஞ்சாப் காவல்துறை கைகோர்த்துள்ளது.
விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகளுக்கு அருகில் வரும்போது பஞ்சாபி மொழியில் குரல் சார்ந்த எச்சரிக்கைகளை இந்த செயலி வழங்கும் என்பதோடு இந்த நடவடிக்கை சாலைப் பாதுகாப்பின் ஒரு பகுதியாக விபத்துக்கள் அதிகம் உள்ள இடங்களை வரைபடமாக்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தினை மாற்றியுள்ளது.
விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகள் என்பது முன்னதாக சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்துள்ள இடமாகும்.