தேசியக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு அளிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டம் ஆனது ஆறு கோடி முதியோர்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்களுக்குப் பயன் அளிக்கும்.
5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த இலவசக் காப்பீட்டு திட்டம் ஆனது குடும்ப அடிப்படையிலானதாகும்.
சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து முதியோர்களும் ABPM-JAY திட்டத்தின் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
தகுதியுள்ள முதியோர்களுக்கு ABPM-JAY திட்டத்தின் கீழ் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும்.
ஏற்கனவே AB PM-JAY திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்கள் ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரை கூடுதல் காப்பீட்டைப் பெறுவார்கள்.