TNPSC Thervupettagam

அனைவருக்குமான துப்புரவு

June 20 , 2019 1891 days 579 0
  • “குடிநீர், துப்புரவு மற்றும் உடல் நல இயல் : 2000 – 2017 : பாகுபாடுகள் மீதான சிறப்புக் கவனம்” என்ற ஒரு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (UNICEF - United Nations Children’s Fund) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) ஆகியவற்றினால் வெளியிடப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
  • உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர்.
  • 2 பில்லியன் மக்கள் சுகாதாரச் சேவைகளைப் பெற முடியாமலும் 3 பில்லியன் மக்கள் அடிப்படையான கைகழுவும் வசதிகளைப் பெறாமலும் உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள 650 மில்லியன் மக்கள் 2000 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கிடையேத் திறந்தவெளிக் கழிப்பிட முறையை நிறுத்தியுள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • ஆனால் 44 சதவிகித இந்தியக் குடும்பங்கள் மட்டுமே குழாய் மூலமான குடிநீரைப் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்