அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதின் போரில் அனைத்து பெண்களையும் அடைதல் (RAW in war) என்ற பிரிவில் பினலெஷ்மி நெப்ராம் வென்றுள்ளார்.
இவர் வடகிழக்கு இந்தியாவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் உரிமை ஆர்வலர் ஆவார்.
இந்த விருதினை பெலராஸைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளரான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் உடன் பினலஷ்மி பகிர்ந்து கொள்கிறார்.
இவ்விருதானது அநீதி, வன்முறை மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றைக் குறித்து தைரியமாக பேசும் மற்றும் எதிர்க்கும் பெண்களை அங்கீகரிக்கிறது.
இந்த விருதானது ஊழல் மற்றும் உரிமை மீறல்களை குறிப்பாக செசன்யாவில் வெளிப்படுத்திய ரஷ்ய புலனாய்வு செய்தியாளரான பொலிட்கோவ்ஸ்கயா கொல்லப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி வழங்கப்படுகிறது.