உலகம் முழுவதும் தனிச்சிறப்பு வாய்ந்த செயல்கள் மேற்கொண்டதனை அங்கீகரிக்கும் வகையில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்திற்கு (United Nations High Commissioner for Refugees -UNHCR) 2017-ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
2016 செப்டம்பரில் புனிதராக அறிவிக்கப்பட்ட அன்னை தெரசாவின் நினைவாக ஹார்மோனி பவுண்டேஷன் எனும் அமைப்பால் 2005-ஆம் ஆண்டு சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவுப் பரிசு தோற்றுவிக்கப்பட்டது.
ஹார்மோனி பவுண்டேஷனின் 2017ஆம் ஆண்டிற்கான கருத்துரு “எல்லைகளைத் தாண்டிய பரிவு”(Compassion Beyond Borders).
UNCHR-ன் செயல் முயற்சிகள் இந்த கருத்துருக்களுக்கு பொருந்துவதாக உள்ளது.
UNHCR அமைப்பானது ஐ.நா.அகதிகள் நிறுவனம் எனவும் அழைக்கப்படும்.
உலகம் முழுவதும் நாடில்லாமல் தவிக்கும் மக்களுக்கும் (Stateless Peoples), உள்நாட்டு சண்டைகளால் நாட்டினுள்ளே இடம் பெயர்ந்த எண்ணிலடங்கா மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் புரியும் ஐ.நா.வின் கீழுள்ள ஓர் அமைப்பே UNHCR ஆகும்.
இதன் தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
இது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு குழுவின் (United Nations Development Group) உறுப்பினராகும்.