அன்னை தெரசாவின் 110வது பிறந்த நாள் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26, அன்று அனுசரிக்கப் பட்டது.
இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாசிடோனியாவில் பிறந்தார், இவர் 1920களின் பிற்பகுதியில் இந்தியாவிற்கு வருகைத் தந்து, கல்கத்தாவின் செயின்ட் மேரி உயர்நிலைப் பள்ளியில் 15 ஆண்டுகள் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களைக் கற்பித்தார்.
இவர் 1950 ஆம் ஆண்டில், ரோமன் கத்தோலிக்க மத திருச் சபையின் அடித்தளத்தை அமைத்தார், இது இப்போது பிறரன்பிற்கான பணியாளர்கள் சபை (மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி) என்று பிரபலமாக அறியப்படுகிறது.
1979 ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து, அந்தப் பரிசிற்கான 192,000 டாலர் பரிசுத் தொகையை இந்தியாவில் ஏழைகளுக்கு உதவுவதற்காக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் இவர்
1962 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது
1969 ஆம் ஆண்டில் சர்வதேச புரிதலுக்கான ஜவஹர்லால் நேரு விருது மற்றும்
1980 ஆம் ஆண்டில் பாரத ரத்னா ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.