இது ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
இந்த நாள் ஆனது தாய்மார்கள் மற்றும் தாய்மையைப் போற்றுவதோடு, தாய்வழி பந்த பிணைப்புகளின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுகிறது.
மேலும் இது தாய்மார்கள் மற்றும் குடும்பங்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த கவனத்தினை ஈர்க்கும் வகையிலான அழைப்பினை விடுக்கிறது.
தனது தாயைக் கௌரவிக்க விரும்பிய அன்னை ஜார்விஸ் என்பவரால் இந்தத் தினம் தொடங்கப்பட்டது.
1914 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 28வது அதிபர், உட்ரோ வில்சன், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.