மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board - CPCB) சமீபத்திய தரவுப் புதுப்பிப்பின் படி, இந்தியாவில் 128 தளங்கள் நச்சு மற்றும் அபாயகரமான பொருட்களால் மாசுபட்டுள்ளன.
இதில் மேற்கு வங்கம் 27 தளங்களுடன் முதலிடத்திலும் ஒடிசா 23 தளங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
CPCB
இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும்.
இது 1974 ஆம் ஆண்டில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் நிறுவப் பட்டது.
CPCBக்கு காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981ன் கீழ் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப் பட்டுள்ளன.
ஏழு மண்டல அலுவலகங்கள் மற்றும் 5 ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் CPCBன் தலைமை அலுவலகம் புது தில்லியில் உள்ளது.
இது நீர் மற்றும் காற்று மாசுபாட்டைத் தடுக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசிற்கு அறிவுரை வழங்குகின்றது.