TNPSC Thervupettagam

அபாயகரமான மாசுபாடு

March 14 , 2020 1720 days 775 0
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board - CPCB) சமீபத்திய தரவுப் புதுப்பிப்பின் படி, இந்தியாவில் 128 தளங்கள் நச்சு மற்றும் அபாயகரமான பொருட்களால் மாசுபட்டுள்ளன.
  • இதில் மேற்கு வங்கம் 27 தளங்களுடன் முதலிடத்திலும் ஒடிசா 23 தளங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

CPCB

  • இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும்.
  • இது 1974 ஆம் ஆண்டில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் நிறுவப் பட்டது.
  • CPCBக்கு காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981ன் கீழ் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப் பட்டுள்ளன.
  • ஏழு மண்டல அலுவலகங்கள் மற்றும் 5 ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் CPCBன் தலைமை அலுவலகம் புது தில்லியில் உள்ளது.
  • இது நீர் மற்றும் காற்று மாசுபாட்டைத் தடுக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசிற்கு அறிவுரை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்