பிரான்சு நாட்டின் அரசானது, அரசுப் பள்ளிகளில் மத அடையாளங்களை அணிவதற்கு கடுமையான தடையை அமல்படுத்தியுள்ளது.
அரசு நடத்தும் பள்ளிகளில் குழந்தைகள் அபாயா உடை அணிவதை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.
அபாயா என்பது முஸ்லீம் பெண்கள் அணியும் தளர்வான, ஒரு முழு நீள ஆடையாகும்.
2004 ஆம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடை செய்த அந்நாட்டு அரசாங்கமானது 2010 ஆம் ஆண்டில் பொது இடங்களில் முகத்தை முழுவதும் மூடச் செய்வதற்குத் தடை விதித்தது.