TNPSC Thervupettagam

அபின் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல்

July 25 , 2022 855 days 537 0
  • மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலான அபின் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் பணியை தனியார் நிறுவனங்கள் தொடங்குவதற்கு வேண்டி இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.
  • பஜாஜ் ஹெல்த்கேர் நிறுவனமானது, மிகவும் செறிவூட்டப்பட்ட அபின் பொருட்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களைப் பெற்ற முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
  • வலி மருந்து மற்றும் இருமல் நிவாரணிகளில் முக்கியமாக இடம் பெறுகின்ற மருந்துப் பொருளான ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்ய இது பயன்படும்.
  • குவாலியர் நகரில் உள்ள மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவானது, ஓபியம் செடிகளைப் பயிரிட விவசாயிகளுக்கு உரிமம் வழங்கி, சாகுபடியை மேற்பார்வை இட்டு அதனைக் கட்டுப்படுத்தச் செய்வதோடு உரிமம் பெற்ற விவசாயிகள் உற்பத்தி செய்யும் அபின் பொருட்களை கொள்முதலும் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்