TNPSC Thervupettagam

அபுதாபி கிரான்ட் பிரிக்ஸ்

November 30 , 2018 2060 days 575 0
  • ஐந்து முறை உலகம் சாம்பியன் பட்டம் வென்ற லெவிஸ் ஹாமில்டன் சாதனை அளவாக 4-வது முறையாக எதிஹாட் ஏர்வேஸ் அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.
  • இவர் அபுதாபியின் யாஸ் மரினா சுற்றுப் பாதையில், 2018 FI நாள்காட்டியின் 21-வது மற்றும் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று இந்த அபுதாபி கிராண்ட் பிரிக்ஸை வென்றார்.
  • இந்த வெற்றியானது இவ்வருடத்தில் அவரது 11-வது வெற்றியாகும். மேலும் ஒட்டுமொத்தமான அளவில் இது அவரது பந்தய வாழ்க்கையின் 73-வது வெற்றியாகும். இவர் தற்போது மைக்கேல் ஷீமேக்கரின் மொத்த வெற்றியை விட 18 வெற்றிகள் மட்டுமே குறைவாக பெற்று உள்ளார்.
  • பெராரியின் செபாஸ்டின் வெட்டேல் மற்றும் ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
  • இறுதிச் சுற்றில் 408 புள்ளிகளுடன் சமன் செய்த பிரிட்டன் வீரரான இவர் ஒரு பருவத்தில் 400 புள்ளிகளுக்கும் மேலாக பெற்ற முதல் ஓட்டுநராக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்