TNPSC Thervupettagam

அபுதாபியில் முதல் இந்துக் கோயில்

February 13 , 2018 2350 days 762 0
  • ஐக்கிய அரபு எமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில், கல்வாத்பா எனும் நகரில் முதல் பாரம்பரியமான இந்துக் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • மத்திய கிழக்கில் அமையவிருக்கும் முதல் பாரம்பரியமான இந்து கற்கோவில் இதுவே ஆகும். டெல்லியிலும் மற்ற இடங்களிலும் உள்ள அக்ஷர்தாம் கோவிலின் மாதிரியைப் போலவே இந்த கோவிலின் வடிவம் மற்றும் கட்டமைப்பு இருக்கும்.
  • ஐக்கிய அரபு அரசாங்கம், இந்தக் கோவில் கட்டுவதற்கு தேவையான நிலத்தை 2015ல் பிரதமர் மோடியின் முதல் வளைகுடா பயணத்தின் போது ஏற்படுத்திக் கொடுத்தது.
  • இந்தக் கோவில் 2020ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு அனைத்து மதப் பின்னணி உடைய மக்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்