TNPSC Thervupettagam
May 27 , 2019 1890 days 597 0
  • டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கரேன் உஹ்லென்பெக் எனும் பேராசிரியர் அபேல் பிரிசு வழங்கப்பட்டு இருக்கின்றார்.
  • இது கணிதத் துறையில் வழங்கப்படும் பெருமைமிகு விருதுகளில் ஒன்றாகும். இது கணிதத்திற்கான நோபல் பரிசு என கருதப்படுகின்றது.
  • இவ்விருதை வென்ற முதலாவது பெண்மணியாகவும் ஒரே பெண்மணியாகவும் இவர் உருவெடுத்திருக்கின்றார்.
  • இது நார்வே நாட்டுப் பணமான குரோனரில் 6 மில்லியன் அளவிற்கான ஒரு பரிசைக் கொண்டிருக்கின்றது (~£530,000).
துவக்கம்
  • அபேல் பரிசு முதலில் 1899 ஆம் ஆண்டில் சோபஸ் லை என்பவரால் முன்மொழியப்பட்டது.
  • கணிதத்திற்காக நோபல் பரிசு கிடையாது என்று தெரிந்த பிறகு இவர் இவ்விருதை முன்மொழிந்தார்.
  • 2002 ஆம் ஆண்டில் அபேல் பரிசு ஆரம்பிக்கப்பட்டது.
  • நார்வே நாட்டுக் கணிதவியலாளரான நீல்ஸ் ஹென்ரிக் அபேல் என்பவரது 100வது பிறந்த தின ஆண்டு விழாவை அனுசரிப்பதற்காக இது வழங்க ஆரம்பிக்கப்பட்டது.
  • அவரின் பெயரால் இப்பரிசு நார்வே அறிவியல் மற்றும் இலக்கியக் கழகத்தால் பெயரளிக்கப்பட்டிருக்கின்றது. (1760 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்