பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் ‘ஒழுங்கற்ற நிலையின் கடவுள்’ என்ற சிறுகோள் வரத் தொடங்கியதால், அந்த சிறுகோளைப் பற்றி ஆய்வு செய்யும் திட்டத்தினை நாசா மீண்டும் தொடங்கியுள்ளது.
"ஒழுங்கற்ற நிலையின் கடவுள்" என்றும் அழைக்கப்படும் அபோபிஸ் என்ற இந்த சிறுகோள் 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று பூமிக்கு அருகில் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் பூமிக்கு 20,000 மைல்கள் தொலைவில் இருக்கும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 370 யார்டு அளவுள்ள இந்த விண்வெளிப் பாறையானது ஒவ்வொரு 7,500 வருடங்களுக்கு ஒருமுறை பூமியை நெருங்குகிறது.
2175 மற்றும் 2195 ஆண்டுகளுக்கு இடையில் பூமியைத் தாக்க 1/2700 வாய்ப்புகளைக் கொண்ட பென்னு சிறுகோள் மிகவும் முக்கியமானதாகும்.
பென்னுவில் இருந்து சேகரிக்கப்பட்ட தூசி மற்றும் பாறை மாதிரிகள் சமீபத்தில் நாசாவால் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.