ஐரோப்பிய விண்வெளி முகமையானது (ESA) 2029 ஆம் ஆண்டில் அபோபிஸ் குறுங்கோள் ஆனது பூமியைக் கடந்து செல்லும் போது அதனைப் பற்றி நன்கு ஆய்வு செய்வதற்கான திட்டத்தினை அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு விண்வெளிப் பாதுகாப்பிற்கான அபோபிஸ் விரைவு ஆய்வுத் திட்டம் (ராம்செஸ்) என பெயரிடப்பட்டுள்ளது.
தோராயமாக 375 மீ அளவு கொண்ட, அபோபிஸ் என்ற குறுங்கோள் ஆனது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 32,000 கிமீ தொலைவில் கடந்து செல்ல உள்ளது.
இவ்வளவு பெரிய அளவிலான இந்த குறுங்கோள் ஆனது சுமார் 5,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூமிக்கு மிக அருகில் வருகிறது.