TNPSC Thervupettagam
May 13 , 2018 2259 days 697 0
  • சீனா, அப்ஸ்டார்-6C எனும் புதிய தொலைத் தொடர்பு விண்கலத்தை புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
  • இந்த விண்கலம், லாங் மார்ச்-3B ராக்கெட் மூலம் ஸிசாங் விண்வெளி ஏவு மையத்திலிருந்து ஏவப்பட்டது.

  • அப்ஸ்டார்-6C விண்கலத்தின் பயன்பாட்டாளர் ஹாங்காங்கைச் சேர்ந்த APT விண்வெளி நிறுவனம் ஆகும்.
  • இந்த விண்கலமானது தொலைக்காட்சி ஒளிபரப்பு, இணைய வசதி, தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக சேவைகள் ஆகியவற்றை ஆசிய-பசிபிக் பகுதிகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
  • இந்த விண்கலமானது, லாங் மார்ச் ராக்கெட் வரிசையின் 273-வது திட்டமாகும். இதன் விண்கலமும், ராக்கெட்டும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்டது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்