இலண்டன் பொருளாதாரப் பள்ளியானது (LSE - London School of Economics) “சமத்துவமற்ற ஆய்வுகளுக்கான” அமர்த்தியா சென் என்ற ஒரு ஆய்வு இருக்கை அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் என்பவரை கௌரவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர் LSE-ல் பேராசிரியராக பணியாற்றினார்.
அமர்த்தியா சென்னின் “பொதுநலப் பொருளாதாரம்” குறித்த பணிகளுக்காக இவருக்கு 1998 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பொதுநலப் பொருளாதாரம் என்பது சமூகத்தின் நல்வாழ்வின் மீதான அப்பொருளாதார விளைவுகளின் அடிப்படையில் பொருளாதாரக் கொள்கைகளை மதிப்பீடு செய்யும் பொருளாதாரத்தின் ஒரு பிரிவாகும்.