TNPSC Thervupettagam
June 13 , 2019 1873 days 731 0
  • இந்தியாவில் முன்னிலையில் உள்ள சமகால ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான அமிதவ் கோஷ் என்பவருக்கு 2018 ஆம் ஆண்டின் ஞானபீட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இலக்கியத்தில் அவருடைய தலைசிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருது கோபால கிருஷ்ண காந்தியினால் வழங்கப்பட்டது.
  • இவர் இதற்கு முன்பு “நிழல் வரிகள்” (1998) என்ற தன்னுடைய நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.
  • கண்ணாடி மாளிகை, பசி அலை, இபிஸ் என்ற மூன்று நாவல் தொகுதியான “ஸீ ஆப் பாப்பீஸ்” ஆகியவை இவருடைய இதரப் படைப்புகளாகும்.
ஞானபீட விருது பற்றி
  • ஞானபீட விருது இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பான பாரதிய ஞானபீடம் என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்றது.
  • இது 1944 ஆம் ஆண்டில் சாகு சாந்தி பிரசாந்த் ஜெயின் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.
  • முதலாவது ஞானபீட விருது 1965 ஆம் ஆண்டில் G. சங்கரா குரூப் (மலையாளம்) என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • இந்த வருடாந்திர விருது ஆங்கிலம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள இந்திய மொழிகளில் எழுதும் இந்திய எழுத்தாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றது.
  • மூர்த்தி தேவி விருது மற்றும் நவலேகான் விருது ஆகியவை இந்த அமைப்பினால் வழங்கப்படும் இதர விருதுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்