அமுர் ஃபால்கன் (பால்கோ அமுரென்சிஸ்) பறவைகளை வரவேற்க என்று தமெங்லாங் மாவட்டம் தயாராகி வருகிறது.
அங்கு ‘கஹுவாய்புய்னா’ என்று பெருமளவில் அழைக்கப்படும் இந்தப் பறவையை வேட்டையாடவும், பிடிக்கவும், கொல்லவும், விற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
இந்த வலசை போகும் பறவைகள் வடக்கு சீனா, கிழக்கு மங்கோலியா மற்றும் தொலைதூர கிழக்கு ரஷ்யாவில் உள்ள தங்கள் இனப்பெருக்கப் பகுதிகளிலிருந்து தமெங்லாங்கின் சில பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு வருகின்றன.
மாவட்ட நிர்வாகம் ஆனது ஆண்டுதோறும் ‘அமுர் பால்கன்’ திருவிழாவை நடத்துகிறது.