மணிப்பூர் மாநிலத்தில் அமூர் வல்லூறுகளை வேட்டையாடுதல், விற்பனை செய்தல் மற்றும் வளர்த்தல் ஆகியவற்றைத் தடை செய்வதாக அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவை “இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972” என்ற சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் படுகின்றன.
இவை நீண்ட தூரம் இடம்பெயரும் பறவை இனங்களாகும்.
இவை ஓய்விற்காக மணிப்பூர் மற்றும் நாகாலாந்திற்கு வருகை புரிகின்றன.
இவை குளிர்காலம் துவங்கிய பின்னர் சுமார் இரண்டு மாதங்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் தங்கும் சைபீரியப் பறவைகளாகும்.
குளிர்காலத்திற்குப் பிறகு, இவை தென்னாப்பிரிக்காவிற்குப் புறப்படுகின்றன.
நாகாலாந்தில் உள்ள டோயாங் ஏரியும் இந்தப் பறவைகளுக்கான ஒரு சரணாலயம் ஆகும்.
ஆகவே, நாகாலாந்து “உலக வல்லூறுகளின் தலைநகரம்” என்று அழைக்கப் படுகிறது.