அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 114வது நீதிபதியாக பிரெட் கவனாக் என்பவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
அமெரிக்க செனட் அவரை அப்பதவியில் நியமிப்பதற்காக 50-48 என்று வாக்களித்தது. இது 1881 ஆம் ஆண்டில் நடந்த வாக்குப் பதிவிற்குப் பிறகு மிகவும் நெருங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நியமனமாகும்.
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அரசியலமைப்பு பதவிப் பிரமாணத்தையும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆண்டனி கென்னடி நீதித்துறை பதவிப் பிரமாணத்தையும் செய்து வைத்தனர்.
இவர் 1987ம் ஆண்டு ஜனாதிபதி ரீகனால் நியமிக்கப்பட்ட நீதிபதி கென்னடிக்குப் பதிலாக பதவி ஏற்கின்றார்.