TNPSC Thervupettagam

அமெரிக்க உளவு செயற்கைக்கோள்

January 22 , 2019 2006 days 586 0
  • அமெரிக்க உளவு செயற்கைக்கோளானது கலிபோர்னியாவிலிருந்து அதன் விண்வெளி சுற்றுப்பாதைக்கு செலுத்தப்பட்டது.
  • வான்ட்ன்பெர்க் விமானப் படைத் தளத்திலிருந்து தேசிய உளவு பார்க்கும் அலுவலக செயற்கைக் கோளானது சக்தி வாய்ந்த டெல்டா 4 என்ற கனரக ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்டது.
  • NROL-7 என பெயரிடப்பட்ட இந்த திட்டமானது 2006-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் 132-வது வெற்றிகரமான செலுத்துதல் ஆகும்.
  • இது கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஏவுதளத்திற்கிடையேயான தகவல் தொடர்பு பிரச்சினைகளால் விண்ணில் செலுத்துவது தள்ளி வைக்கப்பட்ட பின்னரான இரண்டாவது முயற்சியில் செலுத்தப்பட்டது ஆகும்.
  • தேசிய உளவு பார்க்கும் அலுவலகமானது அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களுக்குப் பொறுப்பானதாகும்.
  • ஒன்றிணைந்த செலுத்துதல் கூட்டணியானது (United Launch Alliance) லாக்ஹீட் மார்டின் மற்றும் போயிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்