2019 ஆம் ஆண்டின் அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 19 வயதான பியான்கா வனேசா ஆண்ட்ரெஸ்கு என்பவர் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் கனடிய வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
1968 ஆம் ஆண்டிலிருந்து, ஓபன் போட்டி சகாப்தத்தில் அறிமுகப் போட்டியில் அமெரிக்க ஓபனை வென்ற முதல் பெண்மணி ஆண்ட்ரெஸ்கு ஆவார்.
இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும்.
ஆடவர் பிரிவு
ஸ்பானிய வீரரான ரஃபேல் நடால் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி தனது நான்காவது அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார்.
இது அவரது 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை (20) வைத்துள்ளார்.