TNPSC Thervupettagam

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி 2022

September 15 , 2022 801 days 482 0
  • 2022 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியானது 142வது அமெரிக்க ஓபன் போட்டியாகும்.
  • இது 2022 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும்.
  • இதில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்கரேஸ் வென்றுள்ளார்.
  • ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த இளம் வீரர் என்றப் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • உலகின் முன்னணி வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற முதல் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ஆவார்.
  • அவர் இதுவரை தனது வாழ்க்கையில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உட்பட 10 பட்டங்களை வென்றுள்ளார்.
  • ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ் பரி இணை வெற்றி பெற்றது.
  • மகளிர் இரட்டையர் பிரிவில் செக் நாட்டைச் சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கேடரினா சினியாகோவா இணை சாம்பியன் பட்டம் வென்றது.
  • கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய இணையான ஸ்டோர்ம் சாண்டர்ஸ் மற்றும் ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்