TNPSC Thervupettagam

'அமெரிக்க நாட்டிற்குள் இருந்தபடியே' H-1B நுழைவு இசைவுச் சீட்டினை புதுப்பித்தல்

June 30 , 2023 515 days 251 0
  • மக்களுக்கான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, 'அந்த நாட்டிற்குள் இருந்தபடியே' H-1B நுழைவு இசைவுச் சீட்டினைப் புதுப்பித்தல் செயல்முறையை அமெரிக்கா அறிமுகப் படுத்த உள்ளது.
  • H-1B நுழைவு இசைவுச் சீட்டுடன் அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்களுக்கு H-1B நுழைவு இசைவுச் சீட்டினைப் புதுப்பித்தல் செயல்முறையை சீராக்குவதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • அமெரிக்க நிறுவனங்களில் கோட்பாடு சார்ந்த அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் பல்வேறு சிறப்புத் தொழில்துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணி அமர்த்துவதற்கு அனுமதிக்கிற H-1B நுழைவு இசைவுச் சீட்டு என்பது குடியேற்றம் அல்லாத (தற்காலிக) நுழைவு இசைவுச் சீட்டு ஆகும்.
  • H-1B நுழைவு இசைவுச் சீட்டானது, ஒரு சமயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு என்று செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படுகிறது.
  • 2004 ஆம் ஆண்டு வரையில், குறிப்பிட்ட வகை குடியேற்றம் அல்லாத நுழைவு இசைவுச் சீட்டுகளை, குறிப்பாக H-1B, அமெரிக்காவிற்குள்ளேயேப் புதுப்பிக்கப்படக் கூடியதாக அல்லது முத்திரையிடப் படக்கூடியதாக இருந்தது.
  • அதன் பிறகு, H-1B புதுப்பித்தலுக்காக வேண்டி, தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டில் H-1B விசாவினை நீட்டிப்பிற்கான அனுமதியினைப் பெற தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்